WordPress வலைதளங்களை பொறுத்தவரையில் Plugin-களின் முக்கியத்துவம் என்பது மிகவும் அதிகம். ஏனென்றால், அவை வலைதள வடிவமைப்பாளர்களின் வேலைகள் மற்றும் நேரத்தினை பெரிதும் மிச்சப்படுத்துகின்றன. எனவே, மிகவும் முக்கியமான Best WordPress Plugins-களை பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம்.
Starter templates

இந்த Plugin Astra Theme-ன் ஒரு அங்கமாகும் இவற்றில் பல வலைதள பக்கங்கள் முழுமையான வடிவமைக்கப்பட்ட வலைதளங்களை போலேவே உள்ளது. அதில் உள்ள எட்டு வலைதள Template-களை நீங்கள் இலவசமாக உபயோகிக்கலாம். இவற்றில் பயன்படுத்தி உங்களது வலைதளத்தினை முற்றிலுமாக உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளவும் முடியும். Download Now
Elementor
வலைதளங்களை பொறுத்தவரையில் Page Builder என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் அவற்றை பயன்படுத்தி தங்களுக்கு ஏற்றாற்போல் வலைபக்கங்களை மாற்றியமைக்கலாம். ஒரு சில Advanced Features இல்லாமல் நீங்கள் இந்த Plugin-ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். Elementor Pro-வை பயன்படுத்தினால் உங்கள் வலைதளத்தின் நீங்கள் நினைத்ததை விட அழகான வடிவமைக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. Download Now
Envato Elements
இவை Elementor Template-களை இலவசமாக கொடுக்கும் ஒரு Plugin ஆகும். 100-க்கும் மேற்பட்ட Template-களை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது வலைதளத்தினை மிகவும் சுலபமான முறையில் வடிவமைக்கலாம். Download Now
Rank Math SEO
ஒவ்வொரு WordPress வலைதளத்திற்கு Search Engine Optimization என்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே இந்த Plugin-ஐ பயன்படுத்தி உங்களது வலைதளத்தின் SEO Settings-ஐ வடிவமைக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்நிறுவனம் Instant Indexing என்ற செயல்பாடுகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த Plugin மூலம் நீங்கள் 1 முதல் 5 Targeted Keyword-ஐ நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். (Yoast SEO Plugin-ஐ பொருத்தவரையில் 1 Targeted Keyword-ஐ மட்டுமே இலவசமாக அனுமதிக்கும்) Download Now
Beehive Analytics
உங்களது வலைத்தளத்தில் Traffic-களைப் பற்றி அறிந்து கொள்ள Google Analytics மிகவும் உதவுகிறது. ஆனால், உங்கள் WordPress Dashboard-லேயே அனைத்து விதமான Analytics-களையும் காண இந்த Plugin உங்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் வலைதளத்தினை கூகிள் அனலிடிக்ஸ் இணைய தளத்துடன் இணைத்தால் மட்டுமே போதும். இந்த Plugin செயல்பாடுகள் மிகவும் தனித்தன்மை உடையது குறிப்பிடத்தக்கது. Download Now
Smush
வலைதளங்களின் வேகத்தினை பொறுத்தவரையில் அவற்றின் எடை மிகவும் முக்கியமானதாகும். ஒரு வலைபக்கத்தின் எடை 5 MB எனில் அவற்றில் பயன்படுத்தும் புகைப்படங்களில் எடை மட்டுமே 3 MB ஆக இருக்கலாம். எனவே Smush என்ற Plugin-ஐ பயன்படுத்தி புகைப்படத்தின் எடையை 50 முதல் 60 சதவீதம் வரை குறைக்கலாம். உங்கள் வலைதளத்தின் வேகமும் அதிகமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். Download Now
Really Simple SSL
இந்த Plugin-ஐ பொறுத்தவரையில் வலைதளத்தின் பாதுகாப்பிற்காக வலைதள வடிவமைப்பாளர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் வலைதளம் http லிருந்து https ஆக மாறும். எனவே, உங்கள் வலைதளத்திற்காக நீங்கள் SSL (Secure Sockets Layer) வாங்கி இருப்பீர்கள். ஆகவே இந்த Simple SSL Plugin-ஐ பயன்படுத்தி நீங்கள் சிறப்பாக முறையில் உங்கள் வலைதளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யலாம். Download Now
W3 Total Cache
வலைதளத்தின் வேகம் என்பது அவற்றின் எடையைப் பொறுத்து அமைகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்படிப்பட்ட நடைமுறையில் உங்கள் வலைதளத்தில் உள்ள Cache நினைவகத்தில் பதிவுகள் அதிகமாக பதியப்படும். அதில் உள்ளவற்றை மேலும் மேலும் Delete செய்வதனால் உங்கள் வலைதளத்தின் வேகம் அதிகமாகும். எனவே,W3 Total Cache என்ற Plugin-ஐ பயன்படுத்தி அவற்றினை சுலபமான முறையில் கையாள முடியும். Download Now
Pretty Links
இந்த Plugin-ஐ பயன்படுத்தி உங்களுக்கான தனித்தன்மை வாய்ந்த Link-களை உருவாக்க முடியும். Amazon Affiliate மூலம் நீங்கள் ஒரு பொருளை விற்பதற்கான Link ஆனது அளவில் பெரியதாகவும், புரிதலின்றியும் இருக்கும். ஆனால் இந்த Plugin-ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Link-ஐ உருவாக்கி உங்களது வலைதளத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். Download Now
WP Hustle
இந்த உங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களிடமிருந்து Email, Phone ஆகியவற்றினை பெறுவதற்கு மிகவும் உதவுகிறது. அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது பார்வையாளர்களை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு இது உதவுகிறது மற்றும் இந்த Plugin-ஐ பயன்படுத்தி உங்களது வலைப்பக்கங்களை பார்வையாளர்கள் மூலம் Share செய்யவும் உதவியாக விளங்குகிறது. Download Now
Insert header and Footers
சில வலைத்தளங்களை உங்கள் வலைதளத்தை உடன் இணைப்பதற்கு அவர்களால் வழங்கப்படும் ஒரு HTML Code-ஐ உங்கள் அல்லது Header, Body மற்றும் Footer ஆகிய பகுதிகளில் நீங்கள் இணைத்துக் கொண்டால் அவர்கள் இணையதளத்துடன் உங்கள் வலைதளம் இணைவதற்கு ஈசியாக இருக்கும். எனவே, உங்கள் WordPress வலைதளங்களில் Coding-ஐ பொருத்தவரையில் வலைதள வடிவமைப்பாளர்களுக்கு அதிகம் ஈடுபாடு இருக்காது.இந்த Plugin-ஐ பயன்படுத்தி இந்தவகையான செயல்களை மிகவும் சுலபமாக செய்து உங்கள் வலைதளத்துடன் மற்ற வலைதளங்களை இணைக்கலாம். எடுத்துக்காட்டாக Google Adsence மூலம் உங்கள் வலைதளத்தினை இணைப்பதற்கு இத்தகைய நடைமுறை உபயோகமாக இருக்கும். Download Now
Flat Preloader
உங்களது வலைதளம் முழுமையாக Load ஆகுவதற்கு இரண்டு நொடிகள் தேவைப்படும் என்றால் உங்கள் பார்வையாளர்கள் வலைபக்கத்தை பார்ப்பதற்கு சுற்றிக்கொண்டே இருக்கும். எனவே இந்த Plugin-ஐ பயன்படுத்தி அந்த இரண்டு நொடிகளுக்கு நீங்கள் விரும்பிய ஒரு Animation-ஐ ஆக தேர்ந்தெடுக்கலாம். அவை உங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும். இன்னும் இதைப்பற்றி உங்களுக்கு புரியவில்லை என்றால் இந்த பக்கத்தை ஒருமுறை Refresh செய்யவும் அப்படி செய்யும்போது தென்படும் அனிமேஷன் Preloader ஆகும். Download Now