5 simple steps to Create a website in Tamil

5 steps to create a websites in tamil

The step by step guide to create a website in tamil

create a website in tamil

What is a Website in Tamil

வலைதளம் என்பது பல்வேறு வலைப்பக்கங்களை ஒரு குறிப்பிட்ட முகவரியில் கொண்டுள்ள ஒரு மையமாகும். வலைதளங்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எழுத்துக்களால் நிறைந்தவை. இவை ஒரு பதிவருக்கும் பார்வையாளறுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்படுகிறது. அத்தகைய பல அம்சங்கள் நிறைந்த ஒரு வலைதளத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

How to create a Website in Tamil

5 முக்கியமான வழிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் உங்களுக்கான ஒரு வலைதளத்தை உருவாக்க இயலும்.

Pick domain in Tamil

முக்கியமாக உங்கள் பிளாக்கிற்கு ஒரு டொமைன் பெயர் என்பது அவசியம். அவற்றைப் பெறுவதற்கு Namecheap என்ற தளத்தை உபயோகித்து டொமைன்-ஐ பெறலாம்.(நீங்கள் இப்போது தான் புதிதாக ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் ரெகிஸ்டர் செய்வதன் மூலம் நீங்கள் இலவசமாக வாங்க இயலும்) இப்பொழுது படிப்படியாக டொமைனை எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பற்றி காணலாம்.

Step 1
ஒரு டொமைன்-ஐ வாங்குவதற்கு முன்னால் கீழுள்ள பெட்டியின் உதவியுடன் அதிலுள்ள உள்ள தேடுதல் பட்டியலில் நீங்கள் வாங்க விரும்பும் டொமைனை உள்ளீடு செய்து Search செய்ய வேண்டும்.

Find a domain starting at $0.88

powered by Namecheap

Step 2
உங்களுக்கான Domain கிடைத்தால் நல்லது, ஒருவேளை கிடைக்காவிட்டால் வேறு ஒரு பெயரில் Search செய்யவும் அதன்படி கிடைக்கப்பெற்ற திரையில் உள்ள Add to cart என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3
Add to cart திறை ஓபன் செய்தவுடன் அதில் உள்ள Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்
Step 4
அப்படி கிளிக் செய்தவுடன் வாடிக்கையாளர் சேவைக்காக ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் முன்னதாகவே நேசிப்பின் வாடிக்கையாளராக இருந்தால் Log in to your account என்ற பட்டியலை உபயோகித்து லாகின் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் புதிய வாடிக்கையாளர் என்றால் Create an account பட்டியலில் உங்கள் விவரங்களை உள்ளீடு செய்து உங்களை புதிய வாடிக்கையாளராக பதிவு செய்து கொள்ளலாம்.
Step 5

வாடிக்கையாளர்கள் அல்லது Create account and continue என்பதன்மூலம் உள்நுலைந்தவுடன் ஒரு திரை தோன்றும். அதில் மூன்று வகையான பட்டியலில் முதலில் டொமைன் வாங்குவதற்கான தொகை செலுத்துவதற்காக வழிமுறைகள் தோன்றும், இரண்டாவதாக Billing Address எனும் வாடிக்கையாளர்களின் விபரங்களை எடுத்துரைக்கும், மூன்றாவதாக உங்களது டொமைனை நீங்கள் தானியங்கி மூலமாக வருடம் வாரியாக புதுப்பித்துக் கொள்ள வரும்புகிறீர்கள் என்றால் Automatically renew என்பதை Select செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் Select செய்யதாதீர்கள். அதை செலைட் பண்ணாமல் தவிர்ப்பதன் மூலம் அது தடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்தபிறது நிங்களாகவே வேண்டமென்றால் அதை புதுப்பித்துக்கொள்ளலாம்.

Step 6
இதையெல்லாம் முடித்த பிறகு உங்களின் கூடையில் (Cart) உங்களின் டொமைன் ஒரு வருட பயன்படுத்துவதற்கான சேவையில் இருக்கும். அதை தாங்கள் வேண்டுமென்றால் ஒரு வருடமோ அல்லது கூடுதலாகவோ அதை மாற்றிக்கொண்டு Confirm Order என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
Step 7
உங்கள் பணப்பரிவர்த்தனைக்கான நேரம் இது. பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன் உங்கள் டொமைன் உங்களுக்கு சொந்தமானதாக மாறும். உங்களுக்கான டேஷ்போர்டில் அதற்கான விபரங்கள் தோன்றும். அதை நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக WordPress Hosting ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய நேரம் இது. உங்களது WordPress தளத்திதை உபயோகிப்பதற்கு Hosting என்பது முக்கியம் இணைய உலகில் போஸ்டிங் வழங்குவதற்கு அதிகப்படியான நிறுவனங்கள் உள்ளன. ஆனால் நாங்கள் பரிந்துரைப்பது Green Geeks என்ற நிறுவனம் இந்த நிறுவனம் திறன் மற்றும் வேகத்தின் அடிப்படையில் மற்ற நிறுவனங்களை விட சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, படிப்படியாக WordPress Hosting எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பற்றி காணலாம்.

5 simple steps to Create a website in Tamil 1
Step 1
இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் போஸ்டிங் என்ற மெனுவை கிளிக் செய்து Get Started Now பொத்தானை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 2
அவற்றின் மூலம் மற்ற மூன்று வெவ்வேறுவிதமான ஹோஸ்டிங் சேவைகள் திரையில் தோன்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ற சேவையினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் எந்தவிதமான சேவைக்கும் ஒருவருட டொமைன் இலவசமாக வழங்கப்படும்.

நீங்கள் ஒரு வலைதளத்திற்கு மட்டும் Hosting பெறுகிறீர்கள் என்றால் Lite சேவையை தொடரலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளைதளத்திற்காக Hosting சேவையை பெறுகிறீர்கள் Pro என்ற சேவையை தொடரலாம்.

Step 3

அடுத்ததாக தோன்றும் திரையில் நீங்கள் உங்களுக்கான டொமைனை சொந்தமாக வைத்திருந்தால் I Need to Register a Domain என்ற பெட்டியில் உங்களது டொமைனை உள்ளீடு செய்து தொடரலாம் அல்லது இலவசமாக நீங்கள் பெற விரும்பும் டொமைன் பெயரை I Want to use an Existing Domain என்ற பெட்டியில் உள்ளீடு செய்து தொடரலாம்.

இந்த டொமைன் உங்களுக்கு ஒரு வருடம் இலவசமாக கிடைக்கப் பெறும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை முடித்தவுடன் கண்களில் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
Step 4

அடுத்ததாக தோன்றும் திரையில் நீங்கள் உங்களது விபரத்தினை உள்ளீடு செய்து தொடரவும். இதில் முக்கியமானதாக Email Address என்ற விபரம் மிகவும் முக்கியம். ஏனென்றால், அந்த இமெயிலில் அனைத்து விதமான செயல்களும் மெயில் மூலம் அனுப்பப்படும். எனவே நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும்.

Step 5
அடுத்தபடியாக உங்கள் Hosting பயன்பாட்டிற்கான காலத்தினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் பரிந்துரை 3 வருட ஸேடடிங் சேவை இவற்றை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் அதிகப்படியான பணத்தை சேமிப்பதற்காக வாய்ப்புகள் உண்டு.
Step 6

அடுத்து பணப் பரிவர்த்தனை செய்வதற்கான பட்டியில் நீங்கள் Credit Card மற்றும் Paypal மூலம் பணத்தை செலுத்தி ஹேள்ய சேலையினை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Create Account & Get Started என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 7
இதோ உங்களுக்கான Hosting சேவை கிடைக்கப்பெற்று, உங்களுக்கான Dashboard-ல் அனைத்து விதமான விபரங்களும் காணலாம்.

Install WordPress in Tamil

நீங்கள் உங்களின் வலைதளத்தை உருவாக்குவதற்கு வேர்ட்பிரஸ் என்னும் CMS (Content Management System) என்ற சேவையை தேர்ந்தெடுப்பதன் மூலம் மிகவும் சுலபமாக ஒரு வலைதளத்தை உருவாக்க இயலும். உலகில் நூற்றுக்கு 80 சதவிகித வலைதளம் WordPress உதவியை கொண்டு இயங்கி வருகிறது. 

Step 1

WordPress இன்ஸ்டால் செய்வதற்கு உங்களது Green geeks Hosting-ன் Login என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

Step 2

உங்களுக்கே உரித்தான முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு செய்வதன் மூலம் உங்களுக்கான Dashboard தோன்றும். அதில் உங்கள் Hosting விபரம் இருக்கும். அதில் உள்ள சிபேனல் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

Step 3
cPanel திரையில் Softaculous Apps Installer என்னும் Option-ஐ கிளிக் செய்யவும்.
Step 3
Softaculous Apps Installer திரையில் WordPress என்னும் Option-ஐ கிளிக் செய்யவும்.
Step 4

WordPress Option ஓபன் செய்தவுடன் அதில் காணும் விவரங்களை சரியாக முறையில் நிரப்ப வேண்டும். முதலாவதாக Software Setup என்ற பெட்டியில் உங்களது டொமைன் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.

Step 5
Site Settings என்று தொகுதியில் உங்கள் வலைதளத்திற்கான பெயரை என்ற பெட்டியில் உள்ளீடு செய்ய வேண்டும். செய்தபிறகு Admin Account என்ற பகுதியில் உங்களுக்கே உரித்தான வேர்ட்பிரஸ் Admin Username & Password-ஐ நீங்களாகவே உங்களுக்கு தேவையானவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
Step 6
அதன்பிறகு Choose Language என்ற தொகுதியில் இங்கிலீஷ் என்ற மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
Step 7

பிறகு Advanced Options என்ற தொகுதியில் உங்களது வெப்சைட்டில்-ன் Backup மற்றும் Database ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான தேர்வை தேர்வு செய்ய வேண்டும். (Automatic or Manual)

Step 8

அதன்பிறகு உங்களது தளத்திற்கான ஒரு Theme-ஐ நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவேண்டும். Theme-ஐ தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.(பிறகு வேண்டுமானல் மாற்றிக்கொள்ளலாம்)

Step 9
கடைசியாக உங்களது வலைதளம் WordPress மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது.
Step 9
உங்களுக்கான வலைதளத்தை ஓபன் செய்ய yourdomain.com/wp-admin என்ற லிங்கை கிளிக் செய்தால் வேர்ட்பிரஸ் அட்மின் திரை தோன்றும். அதில் நீங்கள் Step 5 உருவாக்கிய உங்களது Username & Password ஆகியவற்றை உள்ளிட்டு செய்வதன் மூலம் வேர்ட்பிரஸ் லாகின் செய்யலாம்.
Step 10

இப்பொழுது உங்கள் வலைதளத்திற்கு WordPress Dashboard தோன்றும். உங்களுக்கும், உங்கள் வலைதளத்திற்கு தேவையானவற்றை இதன்மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

Design your website beautiful in Tamil

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இது. நீங்கள் மற்றும் நான் மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோர் பலவேறு வகையான வலைதளங்களை தினமும் உருவாக்குகின்றன. எனவே உங்களது வலைதளம் ஆனது அவர்களின் வலைதளத்தில் இருந்து வேறுபட்டதாகவும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தால் உங்களது வலைதளமானது அதிக பார்வையாளர்கள் கிடைக்க வழிவகை செய்யும்.
எனவே உங்களது வலைதளத்தை அழகாகவும் மதிப்புமிக்கதாகவும் வடிவமைப்பதற்கு WordPress-ல் உள்ள Elementor என்ற Page Builder-ஐ பயன்படுத்தி உங்களது வலைதளத்தினை உருவாக்குங்கள்.

Tips to get Visiters in Tamil

கூகுளில் டிராபிக் பெறுவது என்பது மிகவும் கடினம். அதை நீங்கள் பெறுவதற்கு சிலவகையான வழிமுறைகளை தெளிவாக பயன்படுத்த வேண்டும்.
Keyword Research என்ற குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தி Google Traffic-ல் இடம் பெறுவதற்கான வழிகள் உண்டு. உங்கள் வலைதளத்தில் அதிகப்படியான எழுத்துக்கள் நிரைந்த பாரக்கள் இருக்கலாம். ஆனால், அதில் மதிப்புமிக்க Keyword-ஐ உபயோகிப்பதன் மூலம் Google Crawl என்னும் செயலியின் அடிப்படையில் உங்கள் வலைதளம் முழுவதும் Crawl செய்யப்பட்டு உங்களது வலைதளத்தினை Google Search Result Page-ல் எந்த இடத்தை பெறும் என்பதை தீர்மானிக்கும்.
எனவே மதிப்புமிக்க Keyword பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய இடத்தினை நீங்களும் பெறலாம். இலவசமாக Keyword-களை பெறுவதற்கு Ubersuggest என்ற இணையதளத்தை உபயோகிக்கலாம்.

உங்களது WordPress வலைத்தளத்தில் Rankmath அல்லது Yoast ஆகிய SEO Plugin-களை உங்களது Google கணக்கை பயன்படுத்தி Google Search Engine உடன் உங்களது வலைதளத்தை இணைக்கும் பொழுது உங்களது வலைதளம் Google Search Result பக்கத்தில் எந்த இடத்தை பெறும் என்பதை தீர்மானிக்கும். எனவே மதிப்புமிக்க Keyword-களை பயன்படுத்தி வலைதளத்தை தயார்செய்யுங்கள்.

உங்களது வலைதளத்தில் வெறுமனே வாக்கியங்கள் மட்டும் இருந்தால் பத்தாது புகைப்படங்கள், GIF மற்றும் வீடியோக்களை உபயோகிப்பதன் மூலம் உங்களது பார்வையாளர்களுக்கு உங்களது செயல் முறையை தெளிவாக விளக்க இயலும். முக்கியமாக மற்றொரு வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த புகைப்படத்தினை உங்களது வலைதளத்தில் உபயோகிக்காதீர்கள். அது உங்களது கூகுள் டிராபிக்கை குறைக்க வழிவகை செய்யும்.
வலைதளத்தில் இந்த விதமான புகைப்படத்தில் ஏற்படும் Commercial License பிரச்சினையை தீர்க்க நீங்கள் Commercial License உடன் கூடிய இலவச புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம். உதாரணத்திற்கு pixabaypexels மற்றும் burst ஆகிய தளத்தில் உள்ள அனைத்து படங்களுக்கும்  Commercial License இலவசமாக அளிக்கப்படுகிறது. அல்லது Commercial License உடன் கூடிய புகைப்படங்களை நீங்கள் Shutterstock, Gettyimages மற்றும் Envato இதுபோன்ற வலைதளத்தினை பயன்படுத்தி பணம் கொடுத்து வாங்கலாம். இதன் மூலம் உங்கள் வலைதளம் தனித்தன்மை பெற்று வலைதளத்தின் பார்வையாளர்களை அதிகம் பெறலாம்.

சமூக வலைதளங்களில் உள்ள உங்களது கணக்குகளை உங்களது வலைதளத்தில் இணைப்பதன் மூலம் நீங்கள் அதிகமான Visiters பெற இயலும். Youtube வீடியோக்களை Embed செய்து உங்கள் தளத்தில் செய்து உபயோகிக்கலாம். உங்கள் வலைதளத்துடன் உங்களை செயல்களை ஒத்த வலைதளங்களுடன் External Linking செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்களது வலைதளம் எந்தவிதமான செயல்முறைகளை எடுத்துரைக்கிறது என்பதை Google குறுகிய காலத்தில் அறிய இயலும்.

More Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?