register a Domain name in tamil
The step by step guide to register a Domain name in tamil

Register a domain name in tamil in Tamil
Register a domain name in Tamil
டொமைன் பெயர் என்பது தங்கள் நிறுவனத்திற்கோ அல்லது பிளாக்கிற்கோ உரித்தான ஒரு பெயராகும். பல வணிகர்கள் Domain-ஐ இணைய தளத்திற்கான முகவரி என தவறாக நினைக்கின்றனர். ஆனால் டோமைன் என்பது நிறுவனத்தின் முகத்தினை போன்றதாகும். அப்படிப்பட்ட அம்சங்கள் நிறைந்த டோமைன் எப்படி வாங்குவது என்று கீழ்க்காணும் படிநிலைகளை கொண்டு பார்க்கலாம்.
Step 1
ஒரு டொமைன்-ஐ வாங்குவதற்கு முன்னால் கீழுள்ள பெட்டியின் உதவியுடன் அதிலுள்ள உள்ள தேடுதல் பட்டியலில் நீங்கள் வாங்க விரும்பும் டொமைனை உள்ளீடு செய்து Search செய்ய வேண்டும்.
Find a domain starting at $0.88
powered by Namecheap
Step 2
உங்களுக்கான Domain கிடைத்தால் நல்லது, ஒருவேளை கிடைக்காவிட்டால் வேறு ஒரு பெயரில் Search செய்யவும் அதன்படி கிடைக்கப்பெற்ற திரையில் உள்ள Add to cart என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3
Add to cart திறை ஓபன் செய்தவுடன் அதில் உள்ள Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்
Step 4
அப்படி கிளிக் செய்தவுடன் வாடிக்கையாளர் சேவைக்காக ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் முன்னதாகவே நேசிப்பின் வாடிக்கையாளராக இருந்தால் Log in to your account என்ற பட்டியலை உபயோகித்து லாகின் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் புதிய வாடிக்கையாளர் என்றால் Create an account பட்டியலில் உங்கள் விவரங்களை உள்ளீடு செய்து உங்களை புதிய வாடிக்கையாளராக பதிவு செய்து கொள்ளலாம்.
Step 5
வாடிக்கையாளர்கள் அல்லது Create account and continue என்பதன்மூலம் உள்நுலைந்தவுடன் ஒரு திரை தோன்றும். அதில் மூன்று வகையான பட்டியலில் முதலில் டொமைன் வாங்குவதற்கான தொகை செலுத்துவதற்காக வழிமுறைகள் தோன்றும், இரண்டாவதாக Billing Address எனும் வாடிக்கையாளர்களின் விபரங்களை எடுத்துரைக்கும், மூன்றாவதாக உங்களது டொமைனை நீங்கள் தானியங்கி மூலமாக வருடம் வாரியாக புதுப்பித்துக் கொள்ள வரும்புகிறீர்கள் என்றால் Automatically renew என்பதை Select செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் Select செய்யதாதீர்கள். அதை செலைட் பண்ணாமல் தவிர்ப்பதன் மூலம் அது தடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்தபிறது நிங்களாகவே வேண்டமென்றால் அதை புதுப்பித்துக்கொள்ளலாம்.
Step 6
இதையெல்லாம் முடித்த பிறகு உங்களின் கூடையில் (Cart) உங்களின் டொமைன் ஒரு வருட பயன்படுத்துவதற்கான சேவையில் இருக்கும். அதை தாங்கள் வேண்டுமென்றால் ஒரு வருடமோ அல்லது கூடுதலாகவோ அதை மாற்றிக்கொண்டு Confirm Order என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
Step 7
உங்கள் பணப்பரிவர்த்தனைக்கான நேரம் இது. பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன் உங்கள் டொமைன் உங்களுக்கு சொந்தமானதாக மாறும். உங்களுக்கான டேஷ்போர்டில் அதற்கான விபரங்கள் தோன்றும். அதை நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.