உங்கள் வலைத்தளத்தினை உருவாக்க WordPress ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் WordPress-ஐ சுலபமாக கையாள இயலும். ஆனால், உங்கள் வலைதளத்திற்கான Theme களையும், Plugins களையும் கண்டுபிடிப்பதற்கு முன் உங்கள் மழை தளத்திற்கான ஒரு Best WordPress Hosting-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏனெனில், உங்கள் வலைதளத்தின் பாதுகாப்பு மற்றும் வேகம் உங்களது போட்டியாளர்களின் (Competitor) வலைத்தளத்தினை விட சிறந்ததாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்
Hosting சேவையினை வழங்க நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. ஆனால், எல்லா நிறுவன Hosting -ம் ஒரே மாதிரியானவை அல்ல. எனவே, உங்கள் வலைதளத்திற்கு ஏற்ற Hosting ஐ தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.
இந்த வலைபதிவில், உங்கள் வலைதளத்திற்கான சிறந்த Hosting-ஐ எவ்வாறு தேர்ந்தெடுப்பது மற்றும் உங்கள் எங்களால் தனிப்பட்ட முறையில் சோதிக்கப்பட்டு வெற்றியடைந்த சில Hosting நிறுவனங்களைப் பற்றி கலந்துரையாட உள்ளோம்.
Good Hosting Checklist
- Php Version 7+
- Mysql Version 5.6
- Https Support
- 1 Click WordPress Install
- Build – In Caching
- Uptime Guarantee
- 24 / 7 Support
நீங்கள் ஒரு Programmer ஆகவும் மற்றும் இதற்கு முன்பு Hosting வாங்கி இருப்பின் முதல் மூன்று குறிப்பை பற்றி அறிந்து இருக்க இயலும். அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு சுலபமாகப் புரிய வைக்க வேண்டுமென்றால் உங்கள் வலைத்தளத்தினை WordPress மூலம் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் நிறுவுவதற்கு PHP 7+ மற்றும் SQL 5.6+ போன்ற திருத்தப்பட்ட(Updated) திட்டங்களை உங்களது Hosting நிறுவனங்கள் உபயோகிப்பது அவசியமாகும்.
WordPress-ஐ உபயோகித்து வலைதளத்தினை உருவாக்க விரும்புவோருக்கு HTTPs-ஐ WordPress பரிந்துரைக்கிறது. மேலும், நாங்களும் கண்டிப்பாக உபயோகிக்கிறோம், தங்களையும் உபயோகிக்க பரிந்துரைக்கிறோம். Hosting நிறுவனங்களின் SSL Certificate ஐ பயன்படுத்தி HTTPs-ஐ Activate செய்வது உங்கள் வலைதளத்தினை பாதுகாப்பாக வைப்பதுடன், உங்களது வலைதள வாசகர்கள் வலைதளத்தினை பாதுகாப்பாக அணுகுவதை உறுதிசெய்கிறது.
WordPress வலைதளத்தினை Programmer அல்லாதோரும் உருவாக்க இயலும். உங்களது Hosting நிறுவனங்கள் 1 Click WordPress சேவையினை வழங்கும் பட்சத்தில் வலைதளத்தினை இன்னும் எளிதாக வடிவமைக்கலாம்.
கடைசியாக உங்களது Hosting நிறுவனங்களின் வேகம் மற்றும் வலைதள வடிவமைப்பாளர்களுக்கு ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளைகளையும் திறன் ஆகியவை தேவையானவையாகும். எனவே, மேற்கண்ட சில குறிப்புகளை Hosting நிறுவனத்தினை தேர்ந்தெடுக்கும் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Types Of WordPress Hosting
Hosting-ஐ தேர்ந்தெடுக்கும்போது உங்களது விருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் பலவகை Hosting நிறுவனங்கள் பலவிதமான திட்டங்களை கொண்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு தேவையான Hosting தேர்ந்தெடுப்பது குறித்து பொதுவான WordPress Hosting வகைகளை பற்றி காணலாம்.
Shared WordPress Hosting
இது மிகவும் பொதுவான ஒரு Hosting வகை ஆகும். மேலும் மிகவும் மலிவானவையும் கூட. Shared Hosting என்பது பல பயனர்களை கொண்ட ஒரு Server ஆகும். எனவே இவை மலிவானவை ஆகும். எடுத்துக்காட்டாக: கல்லூரி ஹாஸ்டல் போன்ற போன்றதாகும். உங்களுக்காக ஒரு தனியறை இல்லாமல் உங்களது நடவடிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
Shared Hosting என்பது புதிதாக Hosting சேவைகளை பெறுபவர்களுக்கு உகந்ததாகும். ஏனெனில், ஒரு சாதாரண வலைதளத்திற்கு தேவையான வேகம், மற்றும் திறன்களை உள்ளடக்கியது. மேலும் WordPress மூலம் சேவைகளை பெற விரும்புவோருக்கு 1 Click WordPress Install செயல்முறையினை வழங்குகிறது.
Virtual Private Server Hosting
இந்த வகையான Hosting சேவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட ஒரு Server ஆகும். எனவே, Shared Hosting சேவையினை ஒப்பிடும்போது பாதுகாப்பிற்கு ஏற்றதாகும்.
எடுத்துக்காட்டாக: இந்தவகை Hosting ஆனது ஒரு Hotel போன்றதாகும். உங்களுக்கான அறை தனித்தனியாகவே இருக்கும். ஆனால், ஒரு குழுமத்தின் (Server) கீழ் இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.
Dedicated Server Hosting
இந்த வகை Hosting சேவை உங்களுக்கான பிரத்தியேகமான Server ஐ உபயோகித்து உங்களது வலைதளத்தினை உருவாக்க இயலும்.
எடுத்துக்காட்டாக ஒரு சொந்த வீடு (Villa) போன்றதாகும். உங்களது வலைதளத்திற்கான பாதுகாப்பு இந்த வகையான Hosting சேவையினை பயன்படுத்தும்போது உறுதி செய்யப்படுகிறது.
Cloud Hosting
இந்த வகையான Hosting சேவை என்பது மிகப்பெரிய நிறுவனங்களிடமிருந்து மெய்நிகர் Hosting சேவையினை பெறுவதாகும். இந்த வகை நிறுவனங்கள் பல இடத்தில் Server களை கொண்டிருக்கும். இந்த வகையான Hosting க்கு சேவை கட்டணம் ஆனது நீங்கள் உபயோகிக்கும் அளவினைப் பொறுத்ததாகும்.
எடுத்துக்காட்டாக: ஒரு பாதுகாப்பான Luxury Hotel போன்றதாகும். பல இடங்களில் Serverகளை கொண்டிருக்கும். Cloud Hosting சேவையினை வழங்கும் நிறுவனங்கள் சில Amazon மற்றும் Google ஆகும்.
ஆனால் மற்ற Hosting சேவையினை ஒப்பிடும்போது Cloud Hosting உபயோகிப்பதில் பயனர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த பிரச்சனை Cloudways போன்ற Cloud Hosting இடைத்தரகர்கள் மூலம் தீர்க்கப்பட்டு பயனாளர்களுக்கு சுலபமாகிறது.
Choose Best WordPress Hosting
முதலில் உங்களின் வலைதளத்தின் நோக்கத்தினையும் அதற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு, வேகம் மற்றும் திறன் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொண்டு Hosting சேவையினை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.
For Small Business
ஒரு சிறிய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஒரு வலைதளத்தினை Shared Hosting சேவையினை கொண்டு வடிவமைக்கலாம்.
எடுத்துக்காட்டாக: நிறுவனம் Shared Hosting சேவை வழங்குவதில் ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இதன் சேவையினை பெற உங்களுக்கு ஒரு வருடத்திற்கு 6000 முதல் 8000 வரை தேவைப்படும்.
For E-Commerce Business
நீங்கள் ஒரு ஆன்லைன் வர்த்தகம் செய்ய தயாராக உள்ளீர்கள் என்றால்நீங்கள் தாராளமாக Virtual Private Hosting சேவையினை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக: Virtual Private Hosting சேவையினை Hostgator நிறுவனத்தின் மூலம் பெற்று பயன்பெறலாம்.
மிகச் சிறந்த Vps Hosting சேவையினை வழங்குகிறது. Vps Hosting சேவைக்கு வருடத்திற்கு 8000 முதல் 15000 வரை சேவை கட்டணம் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
For Bloggers
நீங்கள் உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு வலைபதிவின் மூலம் தெரிவிக்க, விரும்புபவர்கள் என்றால் உங்களது வலைதளத்தினை Cloud Hosting மூலம் நிறுவலாம்.
ஏனெனில், பாதுகாப்பில் சிறந்தது அதேசமயம் கட்டணத்திலும் குறைந்ததே எடுத்துக்காட்டாக: Cloudways நிறுவனத்தின் மூலம் பல Cloud Hosting சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் சேர்ந்து உங்களது வலைதளத்தினை, சுலபமான முறையில் உருவாக்க இயலும்.
Conclusion
மேற்கண்ட வலைப்பதிவு தங்களுக்கு Best WordPress Hosting in tamil சேவையினை தேர்ந்தெடுப்பதில் ஒரு சிறந்த விளக்கத்தினை கொடுத்திருக்கும் என நம்புகிறேன் மேற்கண்ட Hosting தேர்ந்தெடுப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் ஆகும், மேற்படி தங்களின் நோக்கங்களை பொறுத்து அவை மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் Shared Hosting சேவையினை உபயோகிப்பதில் இருந்து விலகியிருங்கள். தற்போதைய கருத்துப்படி 10-ல் 7 Shared Hosting உபயோகிக்கும் வலைதளங்கள் Hack செய்யப்படுகின்றது.
எனவே உங்களது உழைப்பினை காக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும். Shared Hosting சேவையில் Site Groud நிறுவனம் தங்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இல்லையெனில் நீங்கள் Choudway Choud Hosting ஐ தேர்ந்தெடுத்து உங்கள் வலைத்தளத்தினை உபயோகியுங்கள்.