Create a youtube channel in Tamil 2024

Youtube channel in Tamil

நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே Youtube ஆனது கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும் இதனைக் கொண்டு நீங்கள் மக்களுக்கு நீங்கள் அறிந்த விஷயங்களை பகிர்வதன் மூலம் உங்களது வீடியோக்கள் உலகில் உள்ள அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக அமைகிறது. Create a youtube channel in Tamil

இந்த பதிவில் நீங்கள் ஒரு வீடியோவை தரவேற்றம் செய்வதன் மூலம் மக்களால் அதை பார்க்க முடியும் என்று ஏனெனில் Youtube ஆனது நாம் எதிர்பார்க்காத அளவில் வளர்ந்துள்ளது. ஏனெனில் நீங்கள் உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலில் அனைவரும் உபயோகிக்கும் ஆப்-ல் 75% இணையதள இடத்தை Youtube நிரம்பியுள்ளது. எனவே நீங்கள் உங்களது தொழிலையோ உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையோ உலக மக்களிடம் சென்றடைய அது வழி வகுக்கிறது.

இதனை பயன்படுத்துவதற்கு அதிலிருந்து ஊதியம் பெறுவதற்கும் Youtube ஆனது எந்த விதமான பணத்தையும் முன்பே பெறுவதில்லை உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் பணம் பெறாமல் எப்படி ஊதியம் கொடுக்க முடியுமா நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் அவர்களது பிராண்டை உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்குத்தான் அதிகம் வருமானம் பெற நீங்கள் வழிவகை செய்கிறீர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெறும் 100 சதவிகித வருமானத்திலிருந்து உங்களுக்கு நாற்பது முதல் ஐம்பது சதவிகிதத்தை மட்டுமே உங்களிடம் கொடுக்கிறார்கள்.

எனவே இப்பொழுது ஒரு Youtube சேனலை எப்படி படிப்படியாக Create செய்வது என்பதை பற்றி காணலாம்.

Register a google account in Tamil

ஒரு யூடியூப் சேனலை நீங்கள் Create செய்வதற்கு ஒரு கூகுள் கணக்கு தேவையான ஒன்றாகும். உங்களிடம் ஒரு கூகுள் கணக்கு இருந்தால் யூடியூப் முகப்புப் பக்கத்தில் வலது மூலையில் உள்ள Log in என்ற பொத்தானை கிளிக் செய்து Log in செய்து கொள்ளுங்கள்.

உங்களிடம் கூகுள் கணக்கு இல்லை என்றால் create என்ற பொத்தானை கிளிக் செய்து ஒரு கூகுள் கணக்கை முதலில் create செய்யுங்கள்.

create a youtube channel 2024

Create a youtube channel in Tamil

நீங்கள் உங்கள் கூகுள் கணக்கை வைத்து Login செய்தவுடன் மீண்டும் வலது மூலையில் உள்ள உங்களது பயனர் Icon-ஐ கிளிக் செய்த பிறகு தோன்றும் திரையில் உள்ள Settings என்ற Option கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு உங்களது கணக்கிற்கான Settings பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்லும். அதன்பிறகு யூடியூப் சேனல் என்ற பகுதியில் உள்ள Add or manage your channel(s) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தொடரவும்.

பிறகு உங்களுடைய சேனல் விபரங்கள்அனைத்தும் இங்கு தோன்றும். அதில் நீங்கள் புதிதாக ஒரு சேனலை create செய்ய விரும்பினால் அதிலுள்ள Create a new channel என்ற பொத்தானை கிளிக் செய்து உங்களது சேனலை create செய்வதற்கான பகுதிக்கு செல்லுங்கள்.

இப்போது Brand Accounts என்ற பகுதியில் நீங்கள் சேனல் கிரியேட் செய்வதற்கான Option கிடைக்கப்பெறும். Brand account name என்ற பகுதியில் நீங்கள் விரும்பும் சேனல் பெயரை உள்ளிடலாம். இது Brand பெயராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தேவையான வேறு ஒரு பெயரில் கூட உபயோகிக்கலாம். ஆனால் Brand பெயரையே வைப்பது சிறந்ததாகும். எடுத்துக்காட்டாக, உங்களது கூகுள் கணக்கு yourname@gmail.com எனில் உங்களது யூடியூப் சேனல் Yourname என்று அமைவது சிறப்பான ஒன்று. உங்களுக்கான யூடியூப் சேனல் பெயரை உள்ளீடு செய்த உடன் Create என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்களுக்கான ஒரு யூடியூப் சேனல் ஒன்று உருவாக்கப்பட்டது.

Optimize youtube channel in Tamil

ஒரு யூடியூப் சேனல் ஒன்று create செய்து விட்டால் போதுமா? என்று நீங்கள் கேட்டால் அது மட்டும் போதாது என்பதே எங்கள் பதில். இப்பொழுது ஒரு யூடியூப் சேனலை Customize செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. யூடியூப் சேனலை create செய்து விட்டால் உங்களுக்கான சேனல் பக்கத்தில் உள்ள Customize சேனல் என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்களது யூடியூப் சேனலை Customize செய்ய வழிவகுக்கும்.

நீங்கள் Customize channel என்ற பொத்தானை கிளிக் செய்தவுடன் தோன்றும் திரையில் வலது புறம் உள்ள செட்டிங்ஸ் என்ற Icon-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

கிளிக் செய்தவுடன் சேனல் Settings திரையில் தோன்றும் Privacy என்ற பகுதியில் உள்ள Account Settings மற்றும் Customize the layout of your channel என்ற பகுதியில் உள்ள Advanced setting ஆகிய இரண்டினையும் நீங்கள் கண்டிப்பாக Customize செய்ய வேண்டியது அவசியம்.

Add Links and Description in Tamil

முதலில் பிரைவசி என்ற பகுதியில் உள்ள Account settings என்பதை கிளிக் செய்தவுடன் தோன்றும் Advanced என்ற திரையில் உள்ள Account information பகுதியில் Country மற்றும் உங்களது யூட்யூப் சேனலின் உள்ளடக்கத்தைப் பொறுத்து சேனல் Keyword-ஐ உள்ளீடு செய்ய வேண்டும். இந்த Keyword-ஆனது உங்களது சேனலின் Pillar Keyword ஆக செயல்படும் என்பதை மறந்து விடாதீர்கள். மேலும், கீழ்காணும் செயல்பாடுகளில் உங்களுக்கு தேவையானவற்றை உள்ளீடு செய்து Save என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக Customize channel என்ற பகுதியில் உள்ள Advanced setting என்பதை கிளிக் செய்து அதன்படி தோன்றும் திரையில் உள்ள Channel Description என்ற பெட்டியில் சேனலுக்கே உரித்தான செயல்முறையினை சுருக்கமாக இரண்டு அல்லது மூன்று வரிகளில் விவரிக்கவும்.

பிறகு Details என்ற பகுதியில் Email for Business Inquires என்ற பெட்டியில் உங்களது Email ID-யை உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு Link என்ற பகுதியில் உங்களுடைய சமூக வலைதளங்கள் மற்றும் உங்களுக்கான தனிப்பட்ட வலைதளங்களை ஆகியவற்றை உங்களது யூடியூப் சேனல் உடன் இணைத்துக்கொள்ள இவை உதவுகிறது.

Upload channel Pictures in Tamil

அடுத்தபடியாக உங்களுடைய யூடியூப் சேனலுக்கான படங்களை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு யூடியூப் சேனல் Profile Picture மற்றும் Cover Picture போன்றவற்றினை மாற்றுவதற்கு நீங்கள் அதன் மீது Cursor-ஐ வைத்தால் தோன்றும் பென்சில் போன்ற குறியீட்டினை கிளிக் செய்யவேண்டும்.

கிளிக் செய்தவுடன் தோன்றும் Edit channel icon என்ற பகுதியில் உள்ள Edit என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு தோன்றும் பகுதியில் உங்களுக்கான புகைப்படத்தினை Add profile picture என்ற Option-ஐ பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

இதேபோன்று உங்களது கவர் பிக்சர் மாற்றி அமைக்கலாம்.

Add a banner image in Tamil

அதன்பிறகு என்பதை கிளிக் செய்து உங்கள் சேனலுக்கான உருவத்தினை நீங்கள் மாற்றி அமைக்க விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

Upload a Youtube Videos in Tamil

இப்பொழுது அனைத்து வகையான செயல்முறைகளும் முடிவடைந்துவிட்டது. எனவே தோன்றும் திறையில் Upload Video என்ற Link கிளிக் செய்து உங்களுக்கான வீடியோவை Upload செய்யலாம்.

Exit mobile version