How to increase website speed in Tamil

increase website speed in tamil
இந்த வலைப்பதிவில் ஒரு வலைத்தளத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கான 7 எளிய வழிமுறையினை பற்றி காணலாம்.

7 Simple step to increase Website Speed in Tamil

உங்கள் வலைதளத்தின் வேகத்தையும், செயல் திறன்களையும் கண்காணிப்பதற்கு Pingdom, GTMetrix மற்றும் Google Page Insights போன்ற பத்துக்கும் மேற்பட்ட இலவச கருவிகள் உள்ளன. உங்கள் வலைதளத்தை பற்றி இன்னும் அதிகமான விபரங்களை நீங்கள் அறிய விரும்பினால் அவற்றில் ஏதேனும் ஒன்றின் Premium தேர்ந்தெடுத்தால் போதுமானதாகும்.
உங்கள் வலைதளத்தின் வேகத்தை பற்றி இலவசமாக அறிவதற்கு Pindom என்ற கருவியை உபயோகப்படுத்தலாம்.
இந்த கருவியை பயன்படுத்தி வலைதளத்தின் வேகத்தை மட்டுமல்லாமல் அதன் செயல்திறன்களையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தொடர்ச்சியாக உங்கள் வலைதளத்தின் Uptime மற்றும் Transaction Monitoring ஆகியவற்றை கண்காணிக்க விரும்பினால் மாதம் ரூபாய் 700 செலுத்தி Premium கணக்கை உபயோகித்துக்கொள்ளலாம்.

Choose Powerfull Web Hosting

உங்கள் வலைதளம் 3 வினாடி அல்லது அதற்கு குறைவான நேரத்தை எடுத்துக் கொள்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் அல்லது அதைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதை விரைவில் சரி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு வலைத்தளத்தினை எவ்வாறு வேகப்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக காணலாம்.
அடிப்படையில் உங்கள் வலைதளத்தின் வேகத்தினை நிர்ணயிப்பது உங்கள் Web Hosting ஆகும்.
எனவே, நீங்கள் ஒரு சிறந்த Web Hosting வழங்குநரை தேர்ந்தெடுப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
நாங்கள் பரிந்துரைப்பது GreenGeeks ஆகும். இது சிறந்த திறன்களை உடைய Web Hosting நிறுவனமாகும். உலக அளவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வலைதளங்கள் இவற்றின் உதவியுடன் செயல்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Choose Lightweight WP-Theme

உங்கள் வலைதளத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக செயல்திறனில் மிகுந்தும், எடை அளவில் குறைந்தும் உள்ள WordPress Theme-களை உபயோகப்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாகும்.
மேற்கண்ட அனைத்து சிறந்த பயன்களையும் கொண்டது WPAstra மற்றும் OceanWP ஆகும். எனவே, இவற்றை நாங்கள் உங்களிடம் பரிந்துரைக்கிறோம்.
இவற்றை போன்ற சிறந்த Theme-களை உபயோகப்படுத்துவதால் உங்கள் வலைதளம் வேகமாக இயங்க இதுவும் ஒரு காரணமாகும்.

Update WordPress to the Latest Version

உங்கள் வலைதளத்தில் அவ்வப்போது WordPress Update-கள் தோன்றும் சிலர் அவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவற்றை Update செய்வதை தவிர்த்தால் உங்கள் வலைதள வேகத்தை அவை பாதிக்கும்.

உங்கள் வலைதள WordPress Update-களை நீங்கள் கவனித்து அவற்றுடன் தவறாமல் Update செய்வதன் மூலம் உங்கள் வலைதளம் வேகமாக இயங்க அவை வழிவகுக்கும்.

Install Caching Plugin

அனைத்து வலைதளங்களும் அவற்றின் செயல்திறன் மற்றும் பார்வையாளர்களை பொறுத்து வலைதள செயல்பாடுகளை தற்காலிக நினைவகத்தில் சேமித்து வைத்துக்கொள்ளும்.
இப்படி அதிகமான செயல்முறைகள் நடக்கும் பொழுது தற்காலிக நினைவகத்தில் உள்ள சேமிப்பு அளவானது அதிகரித்து உங்கள் வலைதளத்தின் செயல்திறனையும், அதன் வேகத்தையும் குறைக்கக் கூடும்.

அவற்றை சரிசெய்வதற்கு அடிக்கடி உங்கள் தற்காலிக நினைவகத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, LightSpeed Cache என்ற WordPress Plugin-ஐ பயன்படுத்தி உங்கள் வலைதளத்தின் தற்காலிக நினைவகத்தை அளிக்க முடியும்.

Optimize Images

ஒரு வலைதள பக்கத்தின் எடையினை பொருத்தமட்டில் அதிலுள்ள 50 முதல் 70 சதவிகித எடை அளவினை அவற்றில் உள்ள படங்களே எடுத்துக் கொள்கிறது.
உணர்ச்சிகரமான படங்கள் உங்கள் வலைதள பார்வையாளர்களை அதிகரிக்கும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதேவேளையில் அதிக எடை மிகுந்த படங்கள் உங்கள் வலைதள வேகத்தினை குறைத்து உங்கள் பார்வையாளர்களை எரிச்சலூட்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதிக படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தும் வலைதளங்கள் இத்தகைய சிக்கலுக்கு ஆளாகின்றனர். ஏனென்றால், அதிக எடையினை உடைய படங்களை View செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
இங்கே படங்களின் தரத்தினை குறைக்காமலும், அவற்றின் எடை அளவை மட்டும் குறைப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு.
  1. உங்கள் படங்களை உங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் முன்பே Tinypng, ShortPixel மற்றும் Compressor.io போன்ற கருவிகளை பயன்படுத்தி உங்கள் படங்களை அளவை குறைக்கலாம்.
  2. இரண்டாவதாக உங்கள் தளத்தில் Smush போன்ற WordPress Plugin-களை உபயோகித்து உங்கள் படங்களின் எடை அளவினை குறைக்க இயலும்.

Delete Unnecessary Plugins & Themes

வலைத்தளத்தில் Plugin மற்றும் Theme-கள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைதளத்தின் செயல்பாடு மிகவும் எளிதாகிறது.
இருப்பினும் தேவைக்கும் அதிகமாக Plugin மற்றும் Themeகளை உபயோகப்படுத்தும் போது உங்கள் வலைதளத்தில் செயல்பாட்டை குறைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் வலைதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தேவையற்ற Plugin மற்றும் Themeகளை Delete செய்வதன் மூலம் இப்படிப்பட்ட சிக்கலை உடனடியாக தீர்க்க இயலும்.

Use Pre-Loader Plugins

மேற்கண்ட ஆறு முறையினை பயன்படுத்தி உங்கள் வலைதளத்தின் செயல் திறனை அதிகரிக்கலாம். அவற்றுடன் இணைந்து உங்கள் வலைதளம் சிறந்த வேகத்தினையும் பெறும்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் அனைத்து வலைதளங்களும் சராசரியாக 3 வினாடிக்கும் அதிகமான வலைதள வேகத்தினை கொண்டுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
எனவே, இந்த வலைதள குறைவான வேகத்தினை சரிசெய்வதற்கு WordPress Pre-Loader-ஐ  பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வலைதள வேகத்திலிருந்து திசை திருப்ப இயலும்.
நாங்கள் பரிந்துரைப்பது Flat Preloader ஆகும். இவற்றில் 50-க்கும் மேற்பட்ட Animation-கள் உள்ளன.
Exit mobile version