How to install Elementor Plugin in Tamil

உலகில் பலர் WordPress என்னும் செயலியை பயன்படுத்தி அவர்களது வலைதளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வலைதளத்தை உருவாக்குவதற்கு ஒரு Theme மட்டுமே போதுமான ஒன்று. அந்தத் Theme-ஐ பயன்படுத்தி அவர்களது தேவைகளை மாற்றிக்கொள்வார்கள் சிலர் தேவையான வாசகங்கள் மட்டுமின்றி அதன் முழு உருவத்தையும் தங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றுவதற்கு ஆயத்தம் ஆகிறார்கள். Install Elementor in Tamil

எனவே, Page Builder என்னும் செயலியை பயன்படுத்தி வலைதளத்தின் Header, body மற்றும் Footer ஆகியவற்றை மாற்றி அமைக்க எண்ணுகிறார்கள். எனவே அதிகமான Page Builder-கள் WordPress-ன் நம்பிக்கையுடன் இயங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக Elementor, Divi மற்றும் Brizy ஆகியவை. இவற்றில் நாங்கள் உங்களுக்கு பரிந்துரைப்பது Elementor ஆகும்

இந்த Page Builder உங்களது வலைதளத்தை நீங்கள் நினைத்தபடி உருவாக்குவதற்கு மிகவும் உதவும். இந்த Elementor Page Builder-ஐ தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உபயோகிக்கின்றனர். ஏனென்றால், இதன் Drog and Drop சேவையினை அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது. ஆனால் நாம் உருவாக்கும் தேவையினைப் பொறுத்து அவை மாறுபடுகிறது.

இலவசம் மற்றும் பணத்தின் அடிப்படையில் இவற்றின் சேவைகள் வேறுபட்டு காணப்படுகின்றன. கீழுள்ள படத்தில் இலவசம் மற்றும் பணத்தின் அடிப்படையில் அனைத்து செயல்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இலவச Plugin-ஐ பொருத்தவரையில் நீங்கள் உங்களது வலைத்தளத்தினை ஒரு சாதாரணமான வலைத்தளமாக உருவாக்குவதற்கு இவை உதவுகிறது.

வலைதளம் அழகில் சிறந்ததாக இருக்க வேண்டுமென்றால் Elementor PRO அவசியம். இதன் விலை ஒரு வலைதளத்திற்கு 3000 மட்டுமே ஆகும்.

இப்படிப்பட்ட பல அம்சங்கள் நிறைந்த இவற்றை எப்படி வாங்குவது என்பதை பற்றி படிப்படியாக காணலாம்.
இந்த மென்பொருளை வாங்குவதற்கு கீழ் உள்ள Link-ஐ கிளிக் செய்து முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.
Step 1
கிளிக் செய்தவுடன் தோன்றும் முகப்பு பக்கத்தில் உள்ள Pricing என்ற மெனுவை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
Step 2
மூன்று வெவ்வேறு வகையான சேவைகள் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்துங்கள். எங்கள் பரிந்துரை Expert சேவை ஆகும்.
ஏனென்றால், உங்கள் வலைதளம் மட்டுமின்றி உங்களின் மற்ற வலைதளங்கள், உங்கள் நண்பர்கள் வலைதளம் உள்ளிட்ட பல வலைதளங்களை இவற்றுடன் இணைத்துக்கொள்ளலாம். விலையும் மற்ற சேவைகளை ஒப்பிடும் போது இவை குறைவே. Buy Now என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்
Step 3
இப்பொழுது Checkout என்ற பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்த சேவையின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கும். கீழுள்ள பெட்டியில் உங்களது விபரங்களை உள்ளீடு செய்து Credit Card அல்லது PayPal மூலம் உங்களது பணத்தை செலுத்தி Checkout என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4
பணப்பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தவுடன் உங்களுக்கான UserName உங்களது ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்
Step 5

தங்களுக்கு கிடைத்த UserName-ஐ பயன்படுத்தி உங்களது பாஸ்வேர்டை உருவாக்கி Elementor Login பக்கத்தில் அதை உள்ளீடு செய்து Login செய்ய வேண்டும்

Step 6

Elementor பக்கத்தில் Login செய்தவுடன் உங்களுக்கான பக்கம் உருவாக்கப்பட்டிருக்கும். அதில் உங்களது License Key மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த Plan மட்டுமின்றி Elementor PRO Plugin-ஐ Download செய்வதற்கான Option இருக்கும்

Step 7

Download Plugin என்ற பொத்தானை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் Elementor PRO Plugin-ஐ Download செய்யலாம்.

Step 8
இப்பொழுது உங்கள் WordPress-ஐ Login செய்து உங்களது Dashboard-க்கு சென்று அதில் Pluging என்ற பகுதியில் உள்ள Upload Plugin என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்
Step 9
Open செய்தவுடன் Choose File என்ற பொத்தானை கிளிக் செய்து நீங்கள் Download செய்த Plugin-ஐ தேர்ந்தெடுத்து ஓபன் செய்ய வேண்டும்.
Step 10
இப்பொழுது அதில் உள்ள இன்ஸ்டால் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 11
பிறகு உங்கள் Plugin Install ஆனவுடன் Activate Plugin என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 12
இப்பொழுது உங்களது Elementor PRO Plugin Activate செய்யப்பட்டு Connect செய்வதற்கு தயாராக உள்ளது. எனவே, உங்களது Elementor Lisence-ஐ Activate செய்வதற்கு Connect & Activate என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 12
அது உங்களை Elementor Login பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். அவற்றில் உங்களது விபரங்களை உள்ளீடு செய்து Login செய்ய வேண்டும்
Step 13
Login செய்யப்பட்டவுடன் உங்கள் வலைதளம் உங்களது Elementor கணக்குடன் இணைய தயாராக இருக்கும். எனவே, Activate என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 14
இப்பொழுது உங்கள் Website வெற்றிகரமாக Activate செய்யப்பட்டுவிட்டது.
Step 15

உங்களது Licence பற்றி அறிந்துகொள்ள Elementor பகுதியில் உள்ள Licence என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும். Switch Account என்ற பொத்தானை பயன்படுத்தி உங்கள் வலைதளத்தை வேறு Elementor கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் மற்றும் Disconnect என்ற பொத்தானை பயன்படுத்தி உங்களது வலைத்தளத்தினை Elementor இடமிருந்து Disconnect செய்துகொள்ளலாம்.

Exit mobile version